Metlife Stadium  web
கால்பந்து

FIFA Final| விண்ணைத் தொடும் டிக்கெட் விலை.. நெருங்க முடியாத சாமானியர்கள்!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியை நேரில் காண குறைந்தபட்ச ‘கெட்-இன்’ டிக்கெட்கூட, இந்திய மதிப்பில் சுமார் 8 லட்சம் ரூபாயை எட்ட, தரைத்தளத்தருகிலான லோயர் லெவல் சீடுகள் 11 லட்சம் ரூபாயில் தொடங்குகின்றன.

PT WEB

அமெரிக்காவின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியின் டிக்கெட் விலைகள், சாமானியர்களால் கற்பனை செய்ய முடியாத உயரத்தை எட்டியுள்ளன. மைதானத்திற்குள் நுழைவதற்கான குறைந்தபட்ச ‘கெட்-இன்’ டிக்கெட் விலையே இந்திய மதிப்பில் சுமார் 8 லட்சம் ரூபாயாக உள்ளது.

FIFA 2026

மைதானத்தின் தரைத்தளத்திற்கு அருகில் அமர்ந்து போட்டியை இன்னும் நெருக்கமாக ரசிப்பதற்கான லோயர் லெவல் டிக்கெட்டுகளின் ஆரம்ப விலை மட்டுமே 11 லட்சம் ரூபாய் ஆகும். மேலும், நேரடியாக விற்பனை செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ பிரீமியம் 'பிரண்ட் கேட்டகிரி 1' டிக்கெட்டுகளின் விலை 32 லட்சம் ரூபாய் வரை எகிறியுள்ளது. இதற்கெல்லாம் மேலாக, சர்வதேச கால்பந்து சம்மேளனம் கொண்டு வந்துள்ள அதிகாரப்பூர்வ மறுவிற்பனைச் சந்தையில், ரசிகர்களின் அதீத போட்டி காரணமாக சில வி.ஐ.பி டிக்கெட்டுகளின் விலை பல கோடிகளைத் தொட்டு மிரளவைக்கிறது.