க்கால்பந்து உலகக் கோப்பை தகுதிசுற்றில் 5-வது தரவரிசையில் இருக்கும் பிரேசில் அணியை 75-வது தரவரிசையில் இருக்கும் பொலிவியா அணி தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தது.
2026 கால்பந்து உலகக் கோப்பை தொடர் அடுத்தாண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் கால்பந்து உலகக்கோப்பைக்கான தகுதிசுற்றுபோட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் பிரேசில் அணிக்கு எதிராக நேற்று சொந்த மண்ணில் பொலிவியா அணி விளையாடியது.
இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக 75-வது தரவரிசையில் இருக்கும் பொலிவியா அணி 5-வது தரவரிசையில் இருக்கும் முன்னாள் உலக சாம்பியன் அணியான பிரேசிலை தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தது. சொந்த மண்ணில் இந்த வெற்றியை பொலிவியா ருசிக்க அந்நாட்டின் ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
2026 உலகக்கோப்பைக்கான தகுதிசுற்றில் 48 அணிகள் பங்கேற்கும் நிலையில், போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே நுழைய முடியும்.
பல கண்டங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்றுவரும் நிலையில், தென் அமெரிக்க மண்டல அணிகளுக்கான தகுதி சுற்று போட்டியில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். ஏற்கனவே அர்ஜென்டினா, ஈகுவடார் ஆகிய அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிரேசில்-பொலிவியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் பலம்வாய்ந்த பிரேசிலை போட்டி முழுவதும் பொலிவியா டாமினேட் செய்தது. போட்டியின் 45+4 வது நிமிடத்தில் பொவிலியா வீரர் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்ற, அதற்குபிறகு கோலடிக்க போராடிய பிரேசில் அணியால் ஒரு கோலை கூட அடிக்கமுடியவில்லை.
ஏற்கனவே உலகக்கோப்பை தகுதிசுற்றில் தகுதிபெற்றிருக்கும் பிரேசில் அணியை வீழ்த்திய பொலிவியா, தங்களுடைய உலகக்கோப்பைக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.