மெஸ்ஸி web
கால்பந்து

கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மெஸ்ஸி படைக்கவிருக்கும் 11 சாதனைகள்! என்னென்ன?

2026 கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயின் அணிக்கு எதிராக களமிறங்கும் அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி 11 சாதனைகளை படைக்கவிருக்கிறார்..

Rishan Vengai

அதிக வயது வீரர்

ஸ்பெயினுக்கு எதிரான கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடவிருக்கும் மெஸ்ஸி, இறுதிப்போட்டியில் விளையாடும் அதிக வயது (39 வயது, 25 நாட்கள்) களவீரராக சாதனை படைக்கவிருக்கிறார்.

மெஸ்ஸி

இருப்பினும், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்ற மிக வயதான வீரருக்கான ஒட்டுமொத்த சாதனை, இத்தாலியின் ஜாம்பவான் டினோ ஸாஃப்பிடமே இன்னும் உள்ளது. அவர் 1982 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியபோது, ​​அவருக்கு 40 வயது மற்றும் 133 நாட்கள் ஆகியிருந்தது. ஸாஃப் ஒரு கோல்கீப்பராக இருந்ததால், மெஸ்ஸியின் இந்தச் சாதனை பிரத்தியேகமாகக் கள வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

3 உலகக்கோப்பை

மெஸ்ஸி

மூன்று ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இடம்பெற்ற வரலாற்றின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி பெறவிருக்கிறார். இதற்கு முன்பு இந்தச் சாதனையை நிகழ்த்திய ஒரே வீரர் பிரேசில் ஜாம்பவான் காஃபு ஆவார். அவர் 1994, 1998 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக மூன்று உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

முதல் கேப்டன்

மெஸ்ஸி

3 கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் (2014, 2022, 2006*) ஒரு அணியை வழிநடத்தும் முதல் கேப்டன் என்ற சாதனையை மெஸ்ஸி படைக்கவிருக்கிறார். முந்தைய புகழ்பெற்ற கேப்டன்கள் 2 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மட்டுமே வழிநடத்தியுள்ளனர்.

கேப்டன் மெஸ்ஸி

மெஸ்ஸி

கால்பந்து உலகக்கோப்பையில் பல வீரர்கள் இரண்டு முறை கோப்பை வென்றிருந்தாலும், ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினா வென்றால் கேப்டனாக 2 முறை உலகக்கோப்பை வென்ற ஒரே வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைப்பார்.

இறுதிப்போட்டியில் கோல்

ஸ்பெயினுக்கு எதிரான இறுதிப்போட்டியில் மெஸ்ஸி கோலடித்தால், கால்பந்து உலகக்கோப்பை ஃபைனலில் கோலடித்த அதிக வயது வீரராக சாதனை படைப்பார். இதற்கு முன்பு இறுதிப்போட்டியில் கோலடித்த வீரராக ஸ்வீடனின் நில்ஸ் லீட்ஹோம் 35 வயதில் நிகழ்த்தியிருந்தார்.

முதல் அர்ஜெண்டினா வீரர்

மெஸ்ஸி

நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை 8 கோல்களை அடித்திருக்கும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி, இறுதிப்போட்டியில் கோலடித்தால் அர்ஜெண்டினாவிற்காக ஒரு உலகக்கோப்பையில் அதிக கோலடித்த வீரரான கில்லர்மோ ஸ்டேபிலின் நீண்டகால சாதனையை முறியடிப்பார். 1930-ல் நடைபெற்ற முதல் ஃபிஃபா உலகக் கோப்பையின்போது ஸ்டேபில் எட்டு கோல்களை அடித்ததே சாதனையாக இருந்துவருகிறது.

ஐரோப்பியர் அல்லாத முதல் வீரர்

மெஸ்ஸி

இறுதிப் போட்டியில் மெஸ்ஸி இரண்டு கோல்கள் அடித்தால், ஃபிஃபா உலகக் கோப்பையின் ஒரே பதிப்பில் 10 கோல்கள் அடித்த ஐரோப்பியர் அல்லாத முதல் வீரராக மெஸ்ஸி வரலாற்றில் தடம்பதிப்பார். கோல்டன் பூட் விருது அறிவிக்கப்பட்ட பிறகு 10 கோல்களை இதுவரை யாரும் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2 இறுதிப்போட்டி

மெஸ்ஸி

ஸ்பெயினுக்கு எதிராக மெஸ்ஸி கோலடித்தால் 2 வெவ்வேறு உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் கோலடித்த வீரராக மெஸ்ஸி சாதனை படைப்பார். இந்தப்பட்டியலில் வாவா, பீலே வரிசையில் 6வது வீரராக தன்னை இணைத்துக்கொள்வார்.

உலக சாதனைக்கு ஒரு கோல்

மெஸ்ஸி

இறுதிப் போட்டியில் மெஸ்ஸி கோல் அடித்து, அர்ஜென்டினா ஸ்பெயினை வீழ்த்தி பட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டால், அவர் இந்தத் தொடரில் ஒன்பது கோல்களை எட்டி, உலகக் கோப்பையை வென்ற அணியில் ஒரு வீரர் அடித்த அதிக கோல்கள் என்ற சாதனையை தனதாக்கிக் கொள்வார். தற்போதைய சாதனை பிரேசில் ஜாம்பவான் ரொனால்டோவிடம் உள்ளது. அவர் 2002-ஆம் ஆண்டு பிரேசில் வெற்றி பெற்ற தொடரின்போது எட்டு கோல்களை அடித்திருந்தார்.

ஃபைனலில் ஹாட்ரிக்

மெஸ்ஸி ஏற்கனவே FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் (2022) இரண்டு கோல் அடித்துள்ளார். தற்போது மீண்டும் ஸ்பெயினுக்கு எதிராக அவர் இரண்டு கோல்களை அடித்தால், FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் நான்கு கோல்கள் அடித்த கிலியன் எம்பாப்பேவின் சாதனையை சமன் செய்வார்.

மெஸ்ஸி

அதேபோல ஸ்பெயினுக்கு எதிராக மெஸ்ஸி ஹாட்ரிக் அடித்தால், அவர் எம்பாப்பேவை முந்தி, FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் ஐந்து கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெறுவார். இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் அடித்தால், FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் அடித்த ஜெஃப் ஹர்ஸ்டுக்குப் பிறகு, இந்தச் சாதனையை நிகழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் மெஸ்ஸி பெறுவார். 

கோப்பை தக்கவைப்பு

கால்பந்து வரலாற்றில், இத்தாலி (1934, 1938) மற்றும் பிரேசில் (1958, 1962) ஆகிய நாடுகளுக்குப் பிறகு, FIFA உலகக் கோப்பை பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொள்ளும் மூன்றாவது நாடாக அர்ஜென்டினா திகழ இலக்கு வைத்துள்ளது.

மெஸ்ஸி

ஸ்பெயினுக்கு எதிராக அர்ஜென்டினா வெற்றி பெற்றால், FIFA உலகக் கோப்பை பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் மிக வயதான வீரர் என்ற பெருமையை லியோனல் மெஸ்ஸி பெறுவார். தற்போதைய சாதனையை பிரேசில் ஜாம்பவான் நில்டன் சாண்டோஸ் வைத்துள்ளார்; அவர் 1962-ல் பிரேசில் அணிக்கு இரண்டாவது தொடர்ச்சியான உலகக் கோப்பையை வெல்ல உதவியபோது அவருக்கு 37 வயது