தமிழகத்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனைகள் இந்துமதி, சந்தியா, கார்த்திகா, மாரியம்மாள் மற்றும் சௌமியா என ஐந்து பேர் எதிர்வரும் AFC ஆசிய மகளிர் கால்பந்து கோப்பை தொடருக்கான 23 பேர் அடங்கிய இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணியில் இடம் பெற்றுள்ளனர். வரும் 20-ஆம் தேதி முதல் பிப்ரவரி 6-ஆம் தேதி வரையில் இந்த தொடர் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மூன்று மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சீனா, தைவான், வியட்நாம், இந்தோனேசியா, மியான்மர், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், ஈரான், தாய்லாந்து என 12 அணிகள் இதில் பங்கேற்கின்றன. இந்திய அணி குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளது. ஆசிய அணிகள் எதிர்வரும் 2023-இல் நடைபெற உள்ள ஃபிஃபா மகளிர் கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பாக இந்த தொடர் பார்க்கப்படுகிறது.
AFC ஆசிய மகளிர் கால்பந்து கோப்பை தொடரை நடத்த இந்தியா தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பின் தலைவர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி விவரம்...
கோல்கீப்பர்கள்: அதிதி சவுகான், மைபம் லிந்தோயிங்கம்பி தேவி, சௌமியா நாராயணசாமி.
டிஃபெண்டர்கள்: தலிமா சிப்பர், ஸ்வீட்டி தேவி. ரிது ராணி, லோயிடோங்பாம் அஷலதா தேவி, மனிசா பன்னா, ஹேமம் ஷில்கி தேவி, சஞ்சு யாதவ்.
மிட்பீல்டர்கள்: கமலா தேவி, அஞ்சு தமாங், கார்த்திகா அங்கமுத்து, நோங்மெய்தெம் ரத்தன்பாலா தேவி, நௌரெம் பிரியங்கா தேவி, இந்துமதி கதிரேசன்.
ஃபார்வேட்ஸ்: மனிஷா கல்யாண், கிரேஸ் டாங்மேய், பியாரி சாக்சா, ரேணு, சுமதி குமாரி, சந்தியா, மாரியம்மாள்.
1979-க்கு பிறகு இந்தியா இந்த தொடரை நடத்துகிறது. இந்திய மகளிர் அணி 1979 மற்றும் 1983 வாக்கில் நடைபெற்ற ஆசிய மகளிர் கால்பந்து கோப்பை தொடரில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. 1981-இல் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.