விளையாட்டு

ஐரோப்பிய கால்பந்து தொடரின் முதல் பெண் நடுவர்

ஐரோப்பிய கால்பந்து தொடரின் முதல் பெண் நடுவர்

webteam

ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல கால்பந்து பெண் நடுவர் பிபியானா ஸ்டைன்ஹாஸ், பண்டஸ்லீகா கால்பந்து தொடரில் பணியாற்ற உள்ளார்.

உலகப் புகழ்பெற்ற ஐரோப்பிய கால்பந்து தொடர்களில் ஒன்றான பண்டஸ்லீகாவில் பணியாற்றப் போகும் முதல் பெண் நடுவர் என்ற பெருமையை பிபியானா ஸ்டைன்ஹாஸ் பெற்றுள்ளார். 39 வயதாகும் பிபியானா ஜெர்மனியின் லேன்ஜென்ஹஜன் நகரைச் சேர்ந்தவர். காவல்துறை அதிகாரியாக அவர் பணியாற்றி வருகிறார். கால்பந்து நடுவராக உள்நாட்டு போட்டிகளில் கலக்கி வரும் பிபியானாவின் புதிய பயணத்திற்கு, ஃபிராங்க் ரெபரி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.