இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு அடுத்ததாக, அதிவேகமாக 2 ஆயிரம் ரன்கள் எடுத்த சாதனையை செய்துள்ளார் ஆஸ்திரேலிய டி 20 அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச்.
ஆஸ்திரேலியா டி 20 அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி 20 போட்டியின் போது, குறுகிய போட்டிகளில் விரைவாக 2,000 ரன்கள் எடுத்த இரண்டாவது அதிவேக வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்த போட்டியில், பிஞ்ச் 32 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 46 ரன்கள் எடுத்தார். பிஞ்ச் தனது 62 வது இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார், விராட் கோலி தனது 56 வது இன்னிங்சில் 2000 ரன்களை கடந்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
ஒட்டுமொத்தமாக ஆரோன் பிஞ்ச் டி20 போட்டிகளில் 2000 ரன்கள் எடுத்த 10 வது பேட்ஸ்மேனாக ஆனார், உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களான கோஹ்லி, ரோஹித் சர்மா, மோர்கன் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் ஆகிய 10 வீர்ர்கள் இதுவரை டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்கள் எடுத்துள்ளனர்.
டி 20 போட்டிகளில் 2000 ரன்கள் எடுத்தோர் பட்டியலில் ஆஸ்திரேலியாவில் இருந்து பிஞ்ச் இரண்டாவது இடத்திலும், ஒட்டுமொத்தமாக 10 வது இடத்திலும் இருக்கிறார்.