விளையாட்டு

அரையிறுதியில் தோல்வியை தழுவிய மொராக்கோ அணி - வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்கள்

webteam

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து மொராக்கோ அணி வெளியேறிய நிலையில், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் அந்த அணியின் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அரை இறுதியை எட்டிய முதல் ஆப்ரிக்க அணியான மொராக்கோ , பிரான்ஸை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழையும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் மொராக்கோ தோல்வி அடைந்தது. இதனால் மொராக்கோ அணி ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே, தோல்வியை ஜீரணிக்க இயலாமல் பிரான்ஸின் நைஸ் பகுதியில் மொராக்கோ ரசிகர்கள், காவல்துறையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர்.

பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் மொராக்கோ ரசிகர்கள், காவல்துறையினர் மீது பட்டாசுகளை வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் அவர்களை தடுத்ததால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.