பதினேழு வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
பதினேழு வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இங்கிலாந்து அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற அரையிறுதியாட்டத்தில் இங்கிலாந்து அணி, மூன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் பிரேசிலை வென்றது. காலிறுதியைத் தொடர்ந்து அரையிறுதியிலும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ப்ரீஸ்டர் ஹாட்ரிக் கோல் அடித்து புதிய சாதனை படைத்தார்.
மும்பையில் நேற்று நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி மூன்றுக்கு - ஒன்று என்ற கோல் கணக்கில் மாலி அணியை வீழ்த்தியது. ஸ்பெயின் அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனையில் இங்கிலாந்து அணியுடன் கொல்கத்தாவில் நாளைமறுதினம் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.