விளையாட்டு

2021 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் ‌‌‌‌‌‌‌‌வி‌‌ருது

EllusamyKarthik

ஃபிஃபா வழங்கும் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான போட்டியில் 3 பேரின் பெயர்கள் இறுதிச் சுற்றுக்கு வந்துள்ளன.

லயனல் மெஸ்ஸி, ராபர்ட் லெவன்டோஸ்கி, முகமது சலா ஆகிய 3 பேரில் ஒருவருக்கு 2021ஆம் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருது வரும் 17ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் அறிவிக்கப்பட உள்ளது. 5 முறை சிறந்த வீரர் விருது வென்ற முன்னணி வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ இம்முறை இறுதிச்சுற்றில் இடம்பெறவில்லை. கடந்த 14 ஆண்டுகளில் சிறந்த வீரருக்கான இறுதிச் சுற்றில் ரொனால்டா இடம் பெறாதது இது 2ஆவது முறை ஆகும்.