ரஷ்யாவின் சோச்சி நகரில் நடைபெற்று வரும் FIDE செஸ் உலகக் கோப்பை தொடரில் ஐந்தாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் 26 வயதான இந்திய சதுரங்க விளையாட்டு வீரர் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி. அமெரிக்காவின் ஜெப்ரி சியோங்கை அவர் நான்காவது சுற்றில் வீழத்தியிருந்தார்.
அதேநேரத்தில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரும், தமிழகத்தை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தா, பிரான்ஸின் Maxime Vachier-Lagrave உடனான நான்காவது சுற்றில் தோல்வியடைந்தார். கடுமையான போட்டிக்கு பிறகே இந்த தோல்வியை பிரக்ஞானந்தா சந்தித்தார்.
முதல் மூன்று சுற்றுகளை பிரக்ஞானந்தா சுலபமாக வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.