ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
சீனாவின் ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டித் தொடரின் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடாலை எதிர்த்து, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த இரண்டாம் நிலை வீரர் ரோஜர் ஃபெடரர் விளையாடினார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே முன்னிலை பெற்றுவந்த ரோஜர் பெடரர், 6-4 என்ற கணக்கில் முதல் சுற்றை கைப்பற்றினார். மேலும் அடுத்த சுற்றையும் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி, நேர் செட்டுகளில் ரபேல் நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தையும் ஃபெடரர் வென்றார்.