விளையாட்டு

நடாலுடன் விளையாட பெடரர் ஆர்வம்

நடாலுடன் விளையாட பெடரர் ஆர்வம்

webteam

லேவர் கோப்பை டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடாலுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாட சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய வீரர்களுக்கும், உலக அணி வீரர்களுக்கும் இடையிலான முதலாவது லேவர் கோப்பை டென்னிஸ் போட்டி செக் குடியரசில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. ஒற்றையர் பிரிவில் 9 போட்டிகளும், இரட்டையர் பிரிவில் 3 போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன. இந்தப் போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியில் ரோஜர் ஃபெடரர் பங்கேற்றார். பின்னர் பேசிய அவர், லேவர் கோப்பை டென்னிஸ், கண்காட்சிப் போட்டி அல்ல என்றும், இது மிகவும் சவாலான போட்டியாக இருக்கும் என்று‌ம் அவர் கூறினார். இரட்டையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடாலுடன் சேர்ந்து விளையாட ஆவலாக இருப்பதாகவும் பெடரர் தெரிவித்தார்.