விளையாட்டு

அசத்தல் கேட்ச்... சிக்ஸ் லைனில் மீண்டும் மாயாஜாலம் காட்டிய டூபிளெசிஸ்...!

அசத்தல் கேட்ச்... சிக்ஸ் லைனில் மீண்டும் மாயாஜாலம் காட்டிய டூபிளெசிஸ்...!

webteam

சி.எஸ்.கே. அணி இதுவரை 11 ஆட்டங்களில் 3 வெற்றிகளை மட்டும் பதிவு செய்து பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது. பிளே-ஆஃப் வாய்ப்பு கைமீறி சென்றுவிட்டதால், எஞ்சிய ஆட்டங்களில் இளம் வீரா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன. சென்னை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

தொடக்க ஆட்டர்களாக படிக்கல்லும், ஃபின்ச்சும் களம் இறங்கினர். அப்போது, 6 ஓவர் முடிவில் ஆர்சிபி 46 ரன்களுக்கு பின்ச் விக்கெட்கெட்டை இழந்திருந்தது. இதையடுத்து 7வது ஓவரை சிஎஸ்கே அணியின் சாண்ட்னர் வீசினார். முதல் பந்தை படிக்கல் சிக்ஸ் லைனுக்கு தூக்க, அங்கு நின்றுகொண்டிருந்தது கேட்ச் மன்னன் டூபிளெசிஸ். லாவகமாக வந்த பந்தை பிடித்து சிக்ஸ் லைனுக்கு அருகே விழுந்தார்.

அதற்கு முன்பாக எங்கே சிக்ஸ் லைனை தொட்டு விடுவோமோ என்று அஞ்சிய டூபிளெசிஸ், பந்தை அருகே வந்த கெயிக்வார்டிடம் தூக்கி வீசிவிட்டு கீழே விழுந்தார். அந்த பந்தை கெயிக்வார்டு டைவ் அடித்து பிடித்து அசத்தினார்.