விளையாட்டு

கர்ப்பத்துடன் தடகள போட்டியில் களமிறங்கும் அலிசியா

கர்ப்பத்துடன் தடகள போட்டியில் களமிறங்கும் அலிசியா

webteam

அமெரிக்காவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், 5 மாத கர்ப்பிணியாக இருந்த அலிசியா மொன்டானோ கலந்து கொண்டு அசத்தியுள்ளார் 

அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமை யுஎஸ்ஏ டிரக் மற்றும் பீல்டு சாம்பியன்ஷிப் தடகள போட்டி நடைபெற்றது. இதில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அலிசியா மொன்டானோ (31) கலந்து கொண்டார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த இவர் போட்டியில் கலந்து கொள்வது பார்வையாளர்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. போட்டி தொடங்கியதும் தன் வயிற்றில் 5 மாதக் குழந்தை இருப்பது குறித்தும் எவ்வித கவலை படாமல் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேகமாக ஓடத் தொடங்கினார்.
 
800 மீட்டர் தூரத்தை இவர் 2 நிமிடம் 21.40 நொடிகளில் கடந்தார். இருப்பினும் முதல் இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை. முதல் இடத்தை பிடித்த வீராங்கனையை விட 19 வினாடிகள் மட்டுமே காலதாமதமாகும். 

அலிசியா மொன்டானோ கர்ப்பிணியாக ஓட்ட பந்தயத்தில் கலந்து கொள்வது இது முதல்முறையல்ல. கடந்த 2014-ஆம் ஆண்டு இவரது முதல் குழந்தை வயிற்றில் இருக்கும்போதும் 8 மாத கர்ப்பிணியாக இதுபோன்று ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டார். 3 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் கர்ப்பத்துடன் களத்தில் இறங்குவதை பெருமையுடன் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.