விளையாட்டு

தொடங்கிய ஆஷஸ் தொடர்: இங். நிதான பேட்டிங்

தொடங்கிய ஆஷஸ் தொடர்: இங். நிதான பேட்டிங்

webteam

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் பேட்டிங்கை நிறைவு செய்துள்ளது. 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே பாரம்பரியமாக நடைபெற்று வருவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர். இந்தாண்டுக்கான ஆஷஸ் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இதன் முதல் போட்டியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில், அலெஸ்டர் குக் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். 

பின்னர் மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்கள் இரண்டாவது விக்கெட்டிற்கு 125 ரன்கள் சேர்த்தனர். ஸ்டோன்மேன் 53 ரன்களிலும், வின்ஸ் 83 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். கேப்டன் ஜோ ரூட் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இவ்வாறு முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்துள்ளது.