விளையாட்டு

இங்கிலாந்து அணி முதல் பேட்டிங் - 300 ரன்களை கடக்க திட்டம் ?

webteam

நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதல் பேட்டிங் செய்து வருகிறது.

உலகக் கோப்பை தொடரின் 41வது லீக் போட்டி பிரிட்டனில் உள்ள ரிவர் சைட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, விளையாடி வருகிறது. அந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் நியூசிலாந்து அணியில் லக்கி ஃபெர்குசனிற்கு பதிலாக டிம் சவுதி அணியில் சேர்க்கபட்டுள்ளார்.

புள்ளிகள் பட்டியலை பொறுத்தவரை நியூஸிலாந்து அணி 8 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளை வென்று 11 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 8 போட்டிகளில் 5-ஐ வென்று 10 புள்ளிகளுடன் இருக்கிறது. இதனால் இன்றைய போட்டியில் வெல்லும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். எனவே கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என இரு அணிகளும் உள்ளன. கடந்த போட்டியில் இங்கிலாந்து இந்தியாவிடம் முதல் பேட்டிங் செய்து 337 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதேபோன்று நியூஸிலாந்திடமும் 300 ரன்களுக்கு மேல் ரன்களை அடித்து வெற்றி பெற திட்டமிட்டுள்ளது. 9 ஓவர்கள் முடிவில் அந்த அணி விக்கெட் இழப்பு எதுவுமின்றி 66 ரன்கள் எடுத்துள்ளது.