விளையாட்டு

பேர்ஸ்டோவ் அசத்தல் சதம் : 305 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி

webteam

நியூஸிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி 305 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 41வது லீக் போட்டி இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோவ் மற்றும் ஜாசன் ராய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதத்தை கடந்த நிலையில், ஜாசன் ராய் 60 (61) ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து விளையாடிய பேர்ஸ்டோவ் சதம் அடித்து, 106 (99) ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்ததால் இங்கிலாந்து ரன் ரேட்டில் சரிவை சந்தித்தது. 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு அந்த அணி 305 ரன்களை குவித்தது. இதற்கிடையே வந்த இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் 42 (40) ரன்கள் சேர்த்தார். நியூஸிலாந்து அணியில் ட்ரெண்ட் போல்ட், ஜேம்ஸ் நீஷம் மற்றும் மேட் ஹென்றி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்குள் நுழையும் என்பதால் போட்டி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.