இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 297 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 3வது பயிற்சிப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் உள்ள தி ரோஸ் பவுல் மைதனாத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி முதலில் டாஸ் வென்று பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஃபின்ச் ஆரம்பத்திலேயே 14 (17) ரன்களில் அவுட் ஆகினார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த டேவில் வார்னர் மற்றும் ஷார் மார்ஸ் நிலைத்து விளையாடி 43 (55) மற்றும் 30 (44) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த ஸ்டீஸ் ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 102 பந்துகளில் 116 ரன்கள் எடுத்து அவர் அவுட் ஆக, இறுதி நேரத்தில் கீப்பர் அலெக்ஸ் 14 பந்துகளில் 30 ரன்கள் விளாசினார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது. தற்போது 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்த இங்கிலாந்து 39 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.