விளையாட்டு

ஆஸிக்கு எதிரான 2வது டி20 : இங்கிலாந்துக்கு 158 ரன்கள் இலக்கு

webteam

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 157 ரன்கள் சேர்த்துள்ளது.

இங்கிலாந்து -ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் அதிரடி வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான வார்னர் பூஜ்ஜியம் ரன்னில் அவுட் ஆனார்.

ஆனால் கேப்டன் ஆரோன் ஃபின்ச் 33 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் பெரிதாக ரன் எதுவும் எடுக்கவில்லை. ஆல்ரவுண்டரான மார்கஸ் ஸ்டொயினிஸ் மட்டும் 26 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியில் கிரிஸ் ஜார்டான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முன்னதாக, முதல் டி20 போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது.