இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதற்கட்டமாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா 3 - 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாக உள்ளது. சர்வதேச டி20 கிரிக்கெட் ரேங்கிங் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன.
இரு அணிகளும் சம பலம் கொண்ட அணிகளாக பார்க்கப்படுகிறது. சர்வதேச டி20 களத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதி விளையாடியுள்ளன. இதில் இங்கிலாந்து மற்றும் இந்தியா தலா 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
கடைசியாக இரு அணிகளும் விளையாடிய போட்டியில் இந்தியா 8 பால்கள் எஞ்சியிருந்த நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.