வரும் 2021இல் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைக்கு உட்பட்டு பயோ பபுளில் இந்த தொடர் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அட்டவணை வெளியாகி உள்ளது.
4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்
பிப்ரவரி 5 - 9 மற்றும் பிப்ரவரி 13 - 17 வரையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையில் நடைபெற உள்ளது. அதையடுத்து நடக்க உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. அதில் முன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்
மார்ச் 12 முதல் மார்ச் 20 வரையிலான தேதிகளில் ஐந்து டி20 போட்டிகள் அகமதாபாத்தில் நடத்த.திட்டமிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பூனேவிலும் நடைபெற உள்ளது.