விளையாட்டு

மிடில் பேட்டில் பட்ட பந்து : ரிவீவ் கேட்ட இங்கிலாந்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

மிடில் பேட்டில் பட்ட பந்து : ரிவீவ் கேட்ட இங்கிலாந்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

webteam

ஆரோன் ஃபின்ச்க்கு எதிராக இங்கிலாந்து அணி கேட்ட எல்.பி.டபிள்யு ரிவீவ் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

இங்கிலாந்து ஆஸ்திரேலியா இடையேயான 2வது டி20 போட்டி இங்கிலாந்தில் உள்ள தி ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 157 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் கேப்டன் ஆரோன் ஃபின்ச் மட்டும் 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன் எதுவும் எடுக்கவில்லை.

இந்நிலையில் ஆரோன் பின்ச் பேட்டிங் செய்யும்போது அவருக்கு எதிராக இங்கிலாந்து அணி கேட்ட ரிவீவை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். இங்கிலாந்து அணியின் 7வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் வீசினார். அந்த ஓவரின் ரஷித் வீசிய பந்தை ஃபின்ச் ஸ்டோக் வைத்தார். பந்து பேட்டிங் மையப்பகுதியில் பட்டது. உடனே ரஷித் மற்றும் இங்கிலாந்து கீப்பர் பட்லர் விக்கெட் கேட்டு நடுவரிடம் முறையிட்டனர். ஆனால் அவுட் கொடுக்கப்படவில்லை.

பின்னர் இருவரும் இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கனிடம் கலந்து பேசிய ரிவீவ் ஆப்ஷனுக்கு போனர். அதில் பந்து பேட்டிங் மையப்பகுதியில் பட்டது தெளிவாக தெரிந்தது. அத்துடன் இங்கிலாந்து அணி ரிவீவை இழந்தது. இந்த விவகாரத்தை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். பேட்டின் முனையில் பட்டிருந்தாலும் பரவாயில்லை, மையப்பகுதியில் பட்டதற்கே ரிவீவ் ஆப்ஷனா ? என விமர்சித்துள்ளனர்.