விளையாட்டு

சென்னை டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து!

சென்னை டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க போராடும் இங்கிலாந்து!

jagadeesh

சென்னையில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்திய அணி இங்கிலாந்து வெற்றி பெற 482 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் வெறும் 19 ஓவர்கள் மட்டுமே விளையாடிய இங்கிலாந்து அணி 53 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான ரோரி பேர்ன்ஸ் மற்றும் டாம் சிப்லே என இருவரும் இந்திய பந்து வீச்சாளர்கள் சுழலில் சிக்கி விக்கெட்டை இழந்தனர்.

பின்னர்  களம் இறங்கிய ஜேக் லீச்சும் டக் அவுட்டானார். பின்பு மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில் கேப்டன் ரூட்டும், லாரன்சும் களத்தில் இருந்தனர். இதனையடுத்து 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். இதில் லாரண்ஸ் 26 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 8 ரன்கள் சேர்த்திருந்தபோது அஸ்வின் சுழலில் சிக்கி வெளியேறினார்.

இதன் பின்பு வந்த ஒல்லி போப் 12 ரன்கள் எடுத்திருந்தபோது அக்ஸர் படேல் பந்துவீச்சில் அவுட்டானார். பின்பு விக்கெட் கீப்பர் போக்ஸூம் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்று குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.