விளையாட்டு

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி சார்பில் புதிய சாதனை படைத்த ஜோ ரூட்

EllusamyKarthik

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோ ரூட், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார்.  ஒரே ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை சேர்த்துள்ள இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் அவர். நடப்பு ஆண்டில் 1500+ ரன்கள் சேர்த்ததன் மூலம் இந்த சாதனையை படைத்துள்ளார் அவர். அதுவும் இந்த சாதனையை நடப்பு ஆஷஸ் தொடரில் எட்டியுள்ளார் அவர். 

இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி சார்பில் ஒரே காலண்டர் ஆண்டில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை சேர்த்த வீரராக இருந்தவர் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன். கடந்த 2002-இல் 1481 ரன்களை அவர் சேர்த்திருந்தார். தற்போது அந்த சாதனையை ரூட் முறியடித்துள்ளார். நடப்பு ஆண்டில் 25 டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி இந்த சாதனையை படைத்துள்ளார் அவர். நடப்பு ஆண்டில் மட்டும் ஆறு சதம் மற்றும் இரண்டு அரை சதம் பதிவு செய்துள்ளார் அவர். 

மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான FAB4 வீரர்களாக கருதப்படும் நால்வரில் ரூட்டும் ஒருவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே காலண்டர் ஆண்டில் 1500 ரன்களுக்கு மேல் சேர்த்த வீரர்கள் விவரம்... 

1788 ரன்கள் - முகமது யூசுப் (2006)

1710 ரன்கள் - விவ் ரிச்சர்ட்ஸ் (1976)

1656 ரன்கள் - கிரேம் ஸ்மித் (2008)

1595 ரன்கள் - மைக்கேல் கிளார்க் (2012)

1562 ரன்கள் - சச்சின் டெண்டுல்கர் (2010) 

1544 ரன்கள் - ரிக்கி பாண்டிங் (2005)

1503 ரன்கள் - ரிக்கி பாண்டிங் (2003)

1500+ரன்கள்- ஜோ ரூட் (2021*)