விளையாட்டு

சுழற்பந்து வீசிய இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ராபின்சன்-நெட்டிசன்கள் ரியாக்ஷன்

EllusamyKarthik

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டாவது போட்டி அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 468 ரன்களை, இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. 

இந்த சூழலில் இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பந்து வீசியபோது சில ஓவர்கள் ஆப்-ஸ்பின் வீசியுள்ளார் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன். கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு அக்மார்க் சுழற்பந்து வீச்சாளரை போலவே பந்து வீசியிருந்தார் ராபின்சன். அவரது செயல் இணையவெளியில் நெட்டிசன்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது. 

இங்கிலாந்து அணி இந்த போட்டியில் ஐந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடி வருகிறது. பார்ட்-டைமாக சுழற்பந்து வீசக்கூடியவர் அந்த அணியின் கேப்டன் ரூட் மட்டும்தான். அவர் நான்காவது நாள் போட்டியில் ஃபீல்டிங் செய்ய களம் இறங்கவில்லை. இந்த நிலையில்தான் ராபின்சன் சுழற்பந்து வீசி உள்ளார். 

அடிலெய்ட் மைதானம் சுழலுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதால் இங்கிலாந்து இந்த நகர்வை கையாண்டு இருக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.