விளையாட்டு

விராத்திடம் வில்லங்க கேள்விகேட்ட டேனி வியாட், அதிரடி சதம்!

webteam

இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் பங்கேற்கும் பெண்கள் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் மும்பையில் நடந்து வருகிறது. நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. மிதாலிராஜ் 53 ரன்களும் (43 பந்து, 7 பவுண்டரி), மந்தனா 76 ரன்களும் (40 பந்து, 12 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர்.

அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீராங்கனை டேனிலி வியாட், ரன்மழை பொழிந்தார். அவர் 64 பந்துகளில் 15 பவுண்டரி, 5 சிக்சருடன் 124 ரன்கள் குவித்தார். அதன் காரணமாக, அந்த அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 199 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. பெண்கள் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 190-க்கும் மேலான ஸ்கோரை  சேசிங் செய்து வென்றது இதுவே முதல் முறையாகும். 

அபார சதமடித்த டேனிலி வியாட், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலியை, ‘என்னை கல்யாணம் பண்ணிக்கி றியா?’ என்று ட்விட்டரில் கேட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.