விளையாட்டு

பும்ரா, உமேஷ் யாதவ் வரை பேட்டிங்கில் மிரட்டிய இந்திய அணி - இங்கிலாந்துக்கு 368 ரன் இலக்கு

EllusamyKarthik

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 466 ரன்களை எடுத்து ஆல் அவுட்டாகி உள்ளது. இதன் மூலம் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற 368 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா. 

முதல் இன்னிங்ஸில் இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்திருந்தன. இரண்டாவது இன்னிங்ஸை 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் துவங்கியது இந்தியா. 

ரோகித், ராகுல், புஜாரா, கோலி, பண்ட், தாக்கூர் என பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ரோகித் சதம் விளாசினார். புஜாரா, பண்ட், தாக்கூர் அரை சதம் பதிவு செய்திருந்தார். ராகுல் 46 ரன்களிலும், கோலி 44 ரன்களிலும் அவுட்டாகி இருந்தனர். இதில் இறுதியாக உமேஷ் யாதவ் 25, பும்ரா 24 ரன்கள் எடுத்தனர்.

தற்போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. கிட்டத்தட்ட 126 ஓவர்களில் இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கை இங்கிலாந்து விரட்ட வேண்டும். நான்காம் நாள் ஆட்டத்தில் 36 ஓவர்களும், கடைசி நாள் ஆட்டத்தில் 90 ஓவர்களும் இந்த ஆட்டத்தில் எஞ்சியுள்ளன. 

ஓவல் மைதானத்தில் அதிகபட்சமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் செஸ் செய்யப்பட்டுள்ள ரன்கள் 263. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கும்.