விளையாட்டு

T20WC: தொடங்கியது இறுதி ஆட்டத்தின் விறுவிறுப்பு.. முதலில் களம் காணப்போவது யார்? PAKvsENG

JananiGovindhan

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று மெல்பர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

சூப்பர் 12 சுற்றில் தடுமாறி அரையிறுதியில் நுழைந்த இங்கிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தி அதிரடியாக இறுதிக்குள் நுழைந்தது. அதேபோல லீக் போட்டிகளில் சொதப்பிய பாகிஸ்தான், தென்னாப்பிரிக்காவின் தோல்வி காரணமாக அரையிறுதியில் நுழைந்தது. ஆனால் அரையிறுதியில் பலம் வாய்ந்த நியூசிலாந்தை அசால்ட்டாக வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது.

இந்த இரு அணிகளும் இதுவரை 28 முறை சர்வதேச டி20 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் பாகிஸ்தான் 9 முறையும், இங்கிலாந்து 17 முறையும் வெற்றிபெற்றுள்ளன. டி20 உலகக் கோப்பைகளில் இரு அணிகளும் 2 முறை மட்டுமே மோதியிருக்கின்றன. அதில் 2 முறையும் இங்கிலாந்தே வெற்றியை ருசித்துள்ளது.

இந்த நிலையில், மெர்பர்ன் மைதானத்தில் நடப்பு டி20 உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி தொடங்கியிருக்கிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளதால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய இருக்கின்றன.

இதனிடையே மெல்பர்னில் மழை குறுக்கிட அதிகளவு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் இரு அணிகளும் தலா 10 ஓவர்கள் வரை விளையாடாவிடில் கோப்பை பகிர்ந்தளிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.