ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் கிரேக் ஓவர்டான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய அணி, 2-க்கு 1 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி, ஒல்ட் டிராபோர்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியிலிருந்து ஜேசன் ராய் மற்றும் ஓவர்டான் ஆகியோர் நீக்கப்பட்டு சாம் கரன் மற்றும் கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், காயம் குணமடைந்த நிலையில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனும் அணிக்கு திரும்பியுள்ளார். அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ், ரோரி பர்ன்ஸ் மட்டுமே சிறப்பாக ஆடி வருகின்றனர். மற்ற எந்த பேட்ஸ்மேனும் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் நீக்கப்பட்டு மிட்சல் மார்ஷ் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஸ்மித் மட்டுமே நிலைத்து நின்று ஆடிவருகிறார். இந்த தொடரில் இரட்டை சதம் உள்பட 3 சதம், 2 அரைசதத்துடன் 671 ரன்கள் குவித்திருக்கி றார். அவரை அடுத்து லபுஸ்சேன் நிலையான ஆட்டத்தை ஆடி வருகிறார். வார்னர் உட்பட வேறு எந்த பேட்ஸ்மேனும் சரி யாக ஆடவில்லை.
இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்றால் இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ஆஷஸ் தொடரை வெல்லும் என்பதால் இந்த போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது.
இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு போட்டித் தொடங்குகிறது.