இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதனால் இந்திய அணி முதலில் பேட் செய்கிறது. காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் மோர்கனும், இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயரும் தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயருக்கு மாற்றாக இளம் வீரர் ரிஷப் பண்ட் விளையாடுகிறார். அந்த ஒரு மாற்றத்தை மட்டும் அணியில் கடந்த போட்டியுடன் ஒப்பிடும்போது இந்தியா மேற்கொண்டுள்ளது. “மீண்டும் நாங்கள் முதலில் பேட் செய்யவே விரும்பினோம்” என கேப்டன் கோலி டாஸின்போது தெரிவித்திருந்தார்.
“விக்கெட்டில் பெரிய மாற்றம் இல்லாததால் நாங்கள் முதலில் பந்து வீச விரும்புகிறோம்” என இங்கிலாந்து கேப்டன் பட்லர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியில் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன் மற்றும் ரீஸ் டோப்லி ஆகிய வீரர்கள் இந்தப் போட்டியில் புதிதாக ஆடும் லெவனில் இணைந்துள்ளனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா வெல்லும்.