விளையாட்டு

டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பவுலிங்

டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பவுலிங்

webteam

இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்றுள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்’ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டான் காட்ரெல் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ஃபபியன் ஆலன் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக யஸ்வேந்திர சாஹல் இடம்பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றால் கோப்பையை கைப்பற்றும் என்பதால், வெல்லும் முனைப்பில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.