விளையாட்டு

யானைகள் விளையாடிய கால்பந்தாட்ட போட்டி

யானைகள் விளையாடிய கால்பந்தாட்ட போட்டி

webteam

தாய்லாந்து நாட்டில் யானைகள் பங்கேற்ற கால்பந்தாட்ட போட்டி உற்சாகமாக நடைபெற்றது.

உலக‌க்கோப்பை‌ கால்பந்தாட்ட போட்டிகள் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில் போட்டியின் போது சூதாட்டத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக யானைகள் பங்கேற்ற கால்பந்தாட்ட போட்டி தாய்லாந்தில் நடைபெற்றது. ஆயுத்தாயா நகரில் இந்த போட்டி நடத்தப்பட்டது. யானைகள் விளையாடுவதற்கு என பிரத்யேகமான பந்துகள் பயன்படுத்தப்பட்டன. 

யானைகள் ஒரு அணியாகவும் உள்ளூர் வீரர்கள் ஒரு அணியாகவும் பங்கேற்றனர். யானைகள் மீது கொடிகள் வரையப்பட்டி‌ருந்தன. வீரர்களை பின்னுக்குத் ‌தள்ளி யானைகள் கோல் அடித்து 2க்கு ஒன்று என்ற கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றன.