விளையாட்டு

மாட்டிறைச்சி விவகாரம்: வெஸ்ட் இண்டீஸில் இருந்து ஒரு தமிழ்க் குரல்!

மாட்டிறைச்சி விவகாரம்: வெஸ்ட் இண்டீஸில் இருந்து ஒரு தமிழ்க் குரல்!

webteam

இறைச்சிக்காக பசு, காளை, எருமை, ஒட்டகங்களை விற்கவும் வாங்கவும் மத்திய அரசு மே 23-ம் தேதி தடை விதித்தது. இதை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மத்தியிலும் இந்தப் பிரச்னை பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இந்நிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடந்தது. அப்போது பார்வையாளர் பகுதியில் இருந்த சில இளைஞர்கள், ‘நாங்கள் மாட்டிறைச்சி உண்போம். தமிழன்’ என்று எழுதப்பட்ட அட்டையை காண்பித்தபடி இருந்தனர். இதை, அந்த சேனல் காண்பித்தது. மாட்டிறைச்சி விவகாரம் வெஸ்ட் இண்டீஸில் உள்ள தமிழர்கள் வரை எட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.