தோனி, கோலி உள்ளிட்ட இந்திய அணி வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ, தனது வீட்டில் விருந்தளித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான இரண்டாவது போட்டிக்கு பின்னர், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, தோனி, ரஹானே மற்றும் ஷிகர் தவான் உள்ளிட்டோருக்கு அவர் விருந்தளித்துள்ளார். அதுதொடர்பான புகைப்படங்களை சமூகவலைதளத்தின் பதிவிட்டுள்ள பிராவோ, உடன்பிறவா சகோதரரான தோனி, தமது வீட்டுக்கு வந்தது மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மூலம் அறிமுகமான பிராவோ, தோனி தலைமையிலான சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காவும் விளையாடினார். உலகின் தலைசிறந்த கேப்டன் தோனிதான் என்று பிராவோ பல்வேறு சமயங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்த விருந்தில் தோனி, தனது மகள் ஜிவா உடன் கலந்துகொண்டார்.