விளையாட்டு

இந்திய மகளிர் அணியின் விக்கெட் கீப்பருக்கு டிஎஸ்பி பதவி

இந்திய மகளிர் அணியின் விக்கெட் கீப்பருக்கு டிஎஸ்பி பதவி

webteam

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மாவுக்கு, டிஎஸ்பி பதவி வழங்கப்படும் என ஹிமாச்சல் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டி வரை முன்னேற உறுதுணையாக இருந்த வர்மாவை, காவல்துறை பணியில் சேர வருமாறு, ஹிமாச்சல் பிரதேச முதலமைச்சர் வீர்பத்ர சிங் அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை தொடரில் 9 போட்டிகளில் விளையாடிய சுஷ்மா வர்மா, 7 கேட்சுகள் மற்றும் 8 ஸ்டம்பிங்குகளுடன் 15 விக்கெட்டுகள் வீழ்த்தக் காரணமாக இருந்தார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்தக் காரணமாக இருந்த விக்கெட் கீப்பர் பட்டியலில் சுஷ்மா முதலிடம் பிடித்தார்.