விளையாட்டு

வைரல் ஆகும் விராட் - அனுஷ்கா செல்ஃபி படம்

வைரல் ஆகும் விராட் - அனுஷ்கா செல்ஃபி படம்

rajakannan

4 வருடங்களாக காதலித்து வந்த விராட்-அனுஷ்கா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியில்  திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு முன்பு இருந்தே இந்திய அணி விளையாடும் போட்டிகளின் போது அனுஷ்கா சர்மா மைதானத்திற்கு சென்று ஆட்டத்தை பார்த்து வருகிறார். அதேபோல், இந்திய அணி வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களின் போது அவர் உடனே செல்வார். அப்போதுதெல்லாம், விராட் கோலி, அனுஷ்கா சர்மா குறித்த செய்திகளும் வலம் வரும். 

அந்த வகையில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின் போது அனுஷ்கா சர்மா, கணவர் விராட் கோலிக்கு ஃப்ளையிங் கிஸ் கொடுத்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில், விராட் கோலி - அனுஷ்கா ஜோடி இங்கிலாந்து நாட்டின் ஹோட்டல் ஒன்றில் உணவருந்தும் போது எடுத்துக் கொண்ட செல்ஃபி படங்கள் வைரலாகி வருகிறது. இந்தப் படங்களை விராட் கோலி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

அதேபோல், ஷிகர் தவானு ஒரு படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், விராட் கோலி மற்றும் தவான் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உள்ளனர். அந்தப் படத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த இருவர் இருந்தனர். அவர்கள் செல்லும் வழியில் இருந்த இருவருடன் படம் எடுத்துக் கொண்டதாக தவான் குறிப்பிட்டுள்ளார்.