விளையாட்டு

சேஹல், குல்தீப் மாதிரி சுழல் எங்ககிட்ட இல்லையே: காலிஸ் ஒப்புதல்!

சேஹல், குல்தீப் மாதிரி சுழல் எங்ககிட்ட இல்லையே: காலிஸ் ஒப்புதல்!

webteam

சேஹல், குல்தீப் போல சிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் தென்னாப்பிரிக்க அணியில் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும் என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ஜாக் காலிஸ் சொன்னார்.

அவர் மேலும் கூறும்போது, ’லெக்-பிரேக் வகை பந்து வீச்சாளர்களை கணித்து விளையாட பொதுவாக நேரம் ஆகும். எங்கள் அணியில் தரமான ஸ்பின்னர்கள் இல்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உள்நாட்டில் இத்தகைய பந்து வீச்சை போதுமான அளவில் விளையாடாததுதான் தோல்விக்கு முக்கிய காரணம்.

தென்னாப்பிரிக்க இளம் வீரர்கள் கற்க வேண்டிய காலம் இது. சர்வதேச போட்டிகளில் அதிகமாக விளையாடி அனுபவம் பெற்றால் தான், சுழல் பந்துகளை சரியாக எதிர்கொள்ள முடியும். அனுபம் வாய்ந்த வீரர்கள் (வில்லியர்ஸ், பாப் டு பிளிஸ்சிஸ்) காயம் அடையும் போது அணியின் நிலைமை என்ன ஆகும் என்பதை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் இப்போதாவது உணர வேண்டும். பெரும்பாலான வீரர்களுக்கு சுழற்பந்து வீச்சை சமாளிப்பதில் திறமை இல்லை. அதற்கான பயிற்சிகளை தென்னாப்பிரிக்க வீரர்கள் தொடங்க வேண்டும். 


இந்திய கேப்டன் விராத் கோலி, களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுகிறார். ஒரு கேப்டனாக எல்லா நேரத்திலும் அப்படி இருக்கக்கூடாது. இந்த விஷயத்தில் அவர் கவனம் செலுத்த வேண்டும். இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா சிறந்த ஆல்ரவுண்டர் ஆக வலம் வருவார். அதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது’ என்றார்.