விளையாட்டு

பிரெஞ்சு ஓபன் தொடரையும் மிஸ் செய்கிறாரா ஜோகோவிச்?

பிரெஞ்சு ஓபன் தொடரையும் மிஸ் செய்கிறாரா ஜோகோவிச்?

EllusamyKarthik

டென்னிஸ் உலகில் தனது ரேக்கார்ட் மூலம் தனி சாம்ராஜ்யம் நடத்தி வருபவர் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச். தான் சார்ந்துள்ள விளையாட்டில் நட்சத்திர வீரராக மிளிர்ந்து கொண்டிருக்கும் அவர் விசா சிக்கல் காரணமாக நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் தொடரை மிஸ் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் வரும் மே-ஜூன் வாக்கில் நடைபெற உள்ள பிரெஞ்சு ஓபன் தொடரையும் மிஸ் செய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. 

தடுப்பூசி சான்றிதழை சமர்பிக்க தவறியது ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அவருக்கு விசா மறுக்கப்பட முக்கியக் காரணமாக அமைந்தது. பிரெஞ்சு ஓபனிலும் தடுப்பூசி சான்றிதழ் அவருக்கு சிக்கலை கொடுக்கும் என தெரிகிறது. பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றத்தில் பொதுமக்கள் குழுமும் இடங்களில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் காட்டாயம் என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது ஜோகோவிச்சுக்கு சிக்கலை கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது. 

20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவர் ஜோகோவிச். ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் அந்த கணக்கை அவர் 21 ஆக கூட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. விசா மறுக்கப்பட்டதால் அதை அவர் பங்கேற்கும் அடுத்த கிராண்ட்ஸ்லாம் தொடரில் வெல்வார் என அவரது ரசிகர்கள் நம்புகின்றனர்.