விளையாட்டு

ஐபிஎல் சாம்பியன் யார்? : மீண்டும் நடக்குமா லீப் வருட மேஜிக்!

ஐபிஎல் சாம்பியன் யார்? : மீண்டும் நடக்குமா லீப் வருட மேஜிக்!

EllusamyKarthik

ஐபிஎல் தொடரில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேஜிக் ஒன்று நிகழ்ந்து வருகிறது. அதுவும் குறிப்பாக லீப் வருடங்களில் தான் இந்த மேஜிக் நடக்கிறது. 

ஐபிஎல் மற்றும் லீப் ஆண்டுக்கும் உள்ள ஏதோ ஒரு தொடர்பினால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஐபிஎல் சாம்பியன்களாக இந்த லீப் வருடங்களில் உருவாகி வருகின்றன.

ஐபிஎல் தொடரின் முதல் சீசன் கடந்த 2008இல் தான் ஆரம்பிக்கப்பட்டது. லீப் வருடமான அந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வென்றது.

தொடர்ந்து 2012 லீப் வருடத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், 2016 லீப் ஆண்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. 

அதிலும் லீப் வருடங்களில் சாம்பியன் பட்டத்தை வென்ற அணிகள் முதன்முறையாக ஐபிஎல் அரங்கில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகளாகும்.

2020ம் லீப் வருடமாக அமைந்துள்ளது. அதை வைத்து பார்க்கும் போது இதுவரை ஐபிஎல் அரங்கில் கோப்பையை வெல்லாத டெல்லி கேபிடல்ஸ் அணி 2020 சம்பியனாகலாம் என சொல்லப்படுகிறது. 

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.