விளையாட்டு

நியூ பால், மிடில் ஓவர், டெத் ஓவர்... அசத்தும் பும்ரா..!

EllusamyKarthik

மாடர்ன் டே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் ராஜ்ஜியம் தான் அதிகம். வெகு சில பவுலர்கள் மட்டுமே தங்களது தனித்திறனின் மூலம் அட்டகாசமாக பவுலிங் செய்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் தான் இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா. 

நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். 

நியூ பால், மிடில் ஓவர், டெத் ஓவர் என கேப்டனின் கட்டளைக்கு பணிந்து பந்து வீசுவது பும்ராவின் பாணி.

அதே போல விக்கெட் எங்கு தேவைப்படுகிறதோ அங்கு பும்ராவை பந்து வீச செய்வது கேப்டன்களின் வழக்கம். 

சர்வதேச கிரிக்கெட் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் வரை இது பிரதிபலிக்கும்.  

டெல்லியுடனான நேற்றைய ஆட்டத்தில் கூட பும்ரா அப்படியொரு சம்பவத்தை அரங்கேற்றியிருந்தார். 

15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி. ஸ்டாய்னிஸும், அக்சர் பட்டேலும் மும்பையின் பந்து வீச்சை பவுண்டரிகளாக வெளுத்து கொண்டிருந்தார்கள். 

65 ரன்களுடன் களத்தில் இருந்த ஸ்டொய்னிஸை வந்த வேகத்தில் முதல் பந்திலே க்ளீன் போல்ட் செய்தார் பும்ரா. 

அதே ஓவரில் அடுத்து வந்த சாம்ஸையும் டக் அவுட் ஆக்கி பெவிலியன் திரும்ப வைத்தார். அந்த ஓவரை மெய்டனாக வீசி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஒட்டு மொத்த ஆட்டத்தையும் ஒரே மும்பை கண்ட்ரோலில் கொண்டு வந்தார் பும்ரா. அதுதான் அவரது மேஜிக் பந்துவீச்சு.

இந்த சீசனில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி லீடிங் விக்கெட் டேக்கராகவும் உள்ளார்.