விளையாட்டு

ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட்: தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு?

ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட்: தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு?

webteam

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமன் சஹா காயமடைந்துள்ளதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று தெரிகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்த்தை வழங்கியது. இதையடுத்து அந்த அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாடுகிறது. அடுத்த மாதம் 14 ஆம் தேதி பெங்களூரில் நடக்கும் இந்தபோட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாக ரஹானே செயல்படுகிறார். 

இந்நிலையில் விக்கெட் கீப்பர் சஹா, பெருவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சைப் பெற்று வருகிறார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இது குணமாக நாட்கள் ஆகும் என்பதால் தினேஷ் கார்த்திக் அல்லது பார்த்திவ் பட்டேலுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.