ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் சூரியகுமார் யாதவை இந்திய அணியில் தேர்வு செய்யாதது ஏன்? என பிசிசிஐ-க்கு கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திலீப் வெங்சர்கர்.
“சூரியா அணியில் இடம்பெறாததை பார்த்து திகைத்து போனேன். ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை காட்டிலும் சிறந்த பேட்ஸ்மேன் அவர். நடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக ரன் குவித்து வருகிறார் அவர். இருப்பினும் அவர் அணிக்குள் தேர்வு செய்யப்படாமல் போனதற்கான காரணம் தெரியவில்லை.
பொதுவாக ஒரு பேட்ஸ்மேன் 26 முதல் 34 வயது வரை தான் அவர்களது ஆட்டத்திறனில் உச்சத்தில் இருப்பார்கள். சூரியா இப்போது 30 வயதில் இருக்கிறார்.
ஃபார்மும், பிட்னெஸும் அணியில் தேர்வாவதற்கான அடிப்படை இல்லை என்றால் வேறெந்த அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அணிக்கு மிடில் ஆர்டரில் வலு சேர்க்கும் வல்லமை படைத்தவர் அவர்.
இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலி தேர்வு குழுவிடம் கேள்வி எழுப்ப வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.