விளையாட்டு

கும்ப்ளே இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: வீரேந்திர ஷேவாக்

கும்ப்ளே இடத்தை யாராலும் நிரப்ப முடியாது: வீரேந்திர ஷேவாக்

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் அனில் கும்ப்ளே திறம்பட செயல்பட்டு வந்ததாகவும், அவரின் இடத்தை வேறு யாரும் நிரப்புவது கடினம் என்றும் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறும்போது " அனில் கும்ப்ளே தலைமையிலான அணியில் கலந்துகொண்டு நானும் விளையாடி உள்ளேன். ஆனால் அவர் பயிற்சியாளராக வழிநடத்திய போது இந்திய அணியில் கலந்து கொண்டு நான் விளையாடியது இல்லை. நான் விளையாடிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஒரு சீனியராக எனக்கு பல வழிகாட்டுதல்களை வழங்கியிருக்கிறார். கேப்டனாக இருக்கும்போது நல்ல ஆதரவு தந்திருக்கிறார். கடந்த ஒரு வருடத்தில் பயிற்சியாளர் பொறுப்பில் தனது பணிகளை அவர் திறம்பட செய்திருக்கிறார். எனவே அடுத்து வரும் பயிற்சியாளர் அவரை விட திறமையாக செயல்படுவது என்பது கடினமான விஷயம்" என்றார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே நேற்று விலகிய நிலையில் வீரேந்திர ஷேவாக் இந்த கருத்தினை தெரிவித்திருக்கிறார். புதிய பயிற்சியாளர் பதவிக்கு வீரேந்திர ஷேவாக்கும் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.