இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது செல்ல மகளுடன் தவழ்ந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவராகக் கருதப்படும் தோனி, சமீபத்தில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் தோனி ஓய்வு பெற்று விட்டார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடருக்காக தயாராகி வருகிறது. இதனால் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடும் தோனி, மகள் ஜிவாவுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். அந்தவகையில் மகள் ஜிவாவுடன் தவழ்வது போன்ற வீடியோ ஒன்றினை தோனி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி பதிவிட்டுள்ளார். புல் தரையில் ஜிவா தவழ்ந்து செல்ல, அவருக்குப் பின்னாலேயே தோனியும் தவழ்ந்தபடி செல்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.