விளையாட்டு

சென்னை திரையரங்கில் பாஹி3 படம் பார்த்த தோனி?

webteam

சென்னையில் உள்ள திரையரங்கில் தோனி, படம் பார்த்ததாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது

சர்வதேச போட்டிகளில் தோனி விளையாடாத நிலையில், அடுத்ததாக அவர் விளையாடவுள்ள போட்டி ஐபிஎல் தொடர்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள 13 ஆவது ஐபிஎல் சீசனில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாட இருக்கிறார். தோனியின் ரசிகர்கள் அவரது ஆட்டத்தைக் காண ஆவலுடன் இருக்கிறார்கள். சென்னை வந்துள்ள தோனி தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

13 ஆவது ஐபிஎல் டி20 போட்டிகள் மார்ச் 29 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னையும் மும்பையும் மோதுகின்றன. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சர்வேத கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல மாதங்கள் ஆகிவிட்டன என்றாலும் அவரை அவரது ரசிகர்கள் கொண்டாடாத நாளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தோனியைப் பற்றிய தகவல்களை அவர்கள் ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.

சர்வதேச போட்டிகளில் தோனி விளையாடாத நிலையில், அடுத்ததாக அவர் விளையாடவுள்ள போட்டி ஐபிஎல் தொடர்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள 13 ஆவது ஐபிஎல் சீசனில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விளையாட இருக்கிறார். தோனியின் ரசிகர்கள் அவரது ஆட்டத்தைக் காண ஆவலுடன் இருக்கிறார்கள். சென்னை வந்துள்ள தோனி தற்போது வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள திரையரங்கில் தோனி படம் பார்த்ததாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பாஹி 3 திரைப்படத்தை தோனி பார்த்ததாகவும், அது தொடர்பாக புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவையும், புகைப்படத்தையும் அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்