விளையாட்டு

ராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் தோனி!

ராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் தோனி!

webteam

ராணுவ வீரர்களுடன் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி வாலிபால் விளையாடும் வீடியோ இணையத் தில் பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ராணுவப் பயிற்சி பெற இருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி, கேட்டுக்கொண்டிருந்தார். 

இதையடுத்து அவர், ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சிப் பெற்றார். பின்னர் ‘விக்டர் படை’யுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகி றார். வரும் 15 ஆம் தேதி வரை அவர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளார்.

இந்நிலையில், அவர் ராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடும் வீடியோ ஒன்று அவரது ரசிகர்களால் வெளியிடப் பட்டுள்ளது. அது எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் அதில் இல்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.