விளையாட்டு

’சிக்ஸர்கள் விளாசுவதே விருப்பம்’... யுவராஜின் கேள்விக்குப் பதில் சொன்ன தோனி

’சிக்ஸர்கள் விளாசுவதே விருப்பம்’... யுவராஜின் கேள்விக்குப் பதில் சொன்ன தோனி

webteam

கிரிக்கெட் போட்டிகளின்போது ஆக்ரோஷமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்துவேன் என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான தோனி, ஆக்ரோஷமான பேட்டிங்க்கு பெயர் பெற்றவர். பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிவரும் தோனி, சமீபத்தில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கேப்டன் பதவியின் சுமை காரணமாக தோனியின் பேட்டிங்கில் பழைய வேகம் இல்லை, நிதானமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார் என்றெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில், கேப்டன் சுமை நீங்கியதால் பழைய தோனியைப் பார்க்கலாமா என்று அவரிடம் யுவராஜ் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்குப் பதிலளித்த தோனி, சரியான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்புவதில் எந்த பிரச்னையும் இல்லை. எனது இயல்பான ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடுவேன் என்று தெரிவித்தார். இந்த வீடியோவை யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகிய பின்னர் அவருக்கு யுவராஜ் சிங் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனத்துக்கும் இந்த வீடியோ மூலம் அவர் பதில் கொடுத்துள்ளார்.