விளையாட்டு

ராணுவ பள்ளிக்கு தோனி திடீர் விசிட்!

ராணுவ பள்ளிக்கு தோனி திடீர் விசிட்!

webteam

காஷ்மீரில் உள்ள ராணுவ பள்ளிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சென்று மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட், கால்பந்து, விளம்பரம் என அனைத்து துறையிலும் கால் பதித்தவர். உலக அளவில் ரசிகர்களை பெற்றிருக்கும் தோனியின், சின்ன சின்ன செயல்களும் இணையத்தில் வைரல்தான். கிரிக்கெட்டில் தோனியின் மிகச் சிறந்த பங்களிப்பை பாராட்டி அவரை கவுரப்படுத்தும் வகையில் இந்திய ராணுவம் அவருக்கு லெப்டினெண்ட் கர்னல் பதவி கொடுத்துள்ளது. 

தற்போது ஒய்வில் இருக்கும் தோனி நேற்று திடீரென்று ஸ்ரீநகரில் உள்ள ராணுவ பள்ளிக்கு சென்று அங்குள்ள மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தில் உள்ளார். மிடுக்கான ராணுவ உடையில் சென்ற அவர், அங்கு பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் சந்தித்து பேசி உள்ளார். மாணவர்களுடன் அமர்ந்து உரையாடிய தோனி அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். மேலும் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டு அவர்களை மகிழ்வித்துள்ளார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தோனி பள்ளிக்கு சென்றால் அங்கிருக்கும் மாணவர்கள் அதிர்ச்சி கலந்து ஆனந்தத்தில் திகைத்துள்ளனர். இந்த அழகிய தருணத்தில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை இந்திய ராணுவ தற்போது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.