ஐபிஎல் இரண்டாவது போட்டியின்போது கிண்டல் செய்த கெவின் பீட்டர்சனுக்கு மகேந்திர சிங் தோனி பதிலடி கொடுத்தார். ஐபிஎல்லின் இரண்டாவது போட்டியில் மும்பை மற்றும் புனே அணிகள் மோதின. இந்தப் போட்டியில் போது, வர்ணனையாளராக இருக்கும் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த புனே வீரர் மனோஜ் திவாரியிடம் போட்டி குறித்து பேசி கொண்டிருந்தார். அப்போது கிண்டலுக்காக, மனோஜ் திவாரியை, தோனியிடம் ’பீட்டர்சன்தான் தோனியை விட சிறந்த கோல்ப் வீரர்’ என்று சொல்ல சொன்னார். இதை மனாஜ் திவாரி தோனியிடம் சொன்னதும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, “பீட்டர்சன் தான் என் முதல் டெஸ்ட் விக்கெட்” என்றார் தோனி. இதை கேட்ட வர்ணனையாளர்களும் ரசிகர்களும் சிரித்தனர்.
இதே போட்டியில், இம்ரான் தாகிர் பந்தில் பொல்லார்ட் எல்பிடபிள்யூ ஆனதை அவுட் இல்லை என கூறினார் நடுவர். இதனை கிண்டல் செய்யும் விதமாக, டிஆர்எஸ் முறை மூலம் அப்பீல் செய்யும் செய்கையை செய்தார் தோனி.