முன்னாள் கேப்டன் தோனி தனது செல்லப்பிராணியுடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் தோனி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்க ரஞ்சியில் தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் செலவழித்து வருகின்றார். அதே நேரத்தில் தனது செல்லப் பிராணிகளுடன் விளையாடுவதையும் டோனி மறக்கவில்லை. இதை வெளிப்படுத்தும் வகையில் அவர் தனது வளர்ப்பு பிராணியுடன் தரையில் அமர்ந்து விளையாடுவதும், பாசமாக கட்டி அணைப்பதும் போன்ற வீடியோவை தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த தோனியின் ரசிகர்கள் பலர் அதை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சமீபத்தில் சென்னை விமான நிலையத்தின் தரையில் டோனி படுத்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது குறிப்பிடத்தக்கது.